அறிவிப்பு
அனைத்து வகை அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி / நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
பள்ளியின் மொத்த மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு மாணவருக்கு ஒரு ரூபாய் என கணக்கிட்டு மருத்துவ ஆய்வுக் குழு தொகையை செலுத்தாதவர்கள் 23.03.2023 அன்று காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மருத்துவ ஆய்வுக் குழு பொறுப்பு தலைமை ஆசிரியர்களிடம் உரிய தொகையை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளுமாறு அனைத்து வகை அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி / நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஒப்பம் க.முனுசாமி
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து வகை அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி / நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) தகவலுக்காவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.