EXAM

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் மருத்துவச் சான்று ஒப்படைக்க கோருதல்

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் மருத்துவச் சான்று ஒப்படைக்க கோருதல்

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு   மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் மருத்துவச் சான்று ஒப்படைக்க கோருதல்   மார்ச் 2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகள் மாணவ மாணவியர்களின்  மருத்துவச்சான்றினை வேலுர் மாவட்ட காட்பாடி, கல்புதுர் அரசுத் தேர்வுகள் துறை, உதவி இயக்குநர் அலுவலகத்தில் 31-12-2018 அன்று மாலை 05.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.     முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவ
மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தனித்தேர்வர்கள் விண்ணப்பங்கள்  சேவை மையம் மூலம் பெறுதல் சார்பு

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தனித்தேர்வர்கள் விண்ணப்பங்கள் சேவை மையம் மூலம் பெறுதல் சார்பு

நடைபெறவுள்ள மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் 27-12-2018 பிற்பகல் முதல் 05-01-2019 வரை வரவேற்க்கப்படுகிறது. இணைப்பில் குறிப்பிட்டுள்ள அரசு சேவை மையமாக செயல்படும் பள்ளிகளுக்கு உரிய  ஆவணத்துடன் சென்று பதிவு செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் இத்துடன் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட செய்திக்குறிப்பு இணைக்கப்படுகிறது. அதில் குறிப்பிட்டுள்ளவாறு சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சேவை மைய பள்ளிகள் விவரம் கீழ்வருமாறு NODAL SCHOOL செய்திக்குறிப்பு march 2019 - pvt candidates application(1) முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் தலைமைஆசிரியர் அனைத்து உயர் / மேல்நில
ஜீன் 2015 முதல் அக்டோபர் 2017 வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு – முகப்புத்தாள் தைதற்கான செலவின காசோலை வழங்குதல் சார்பு

ஜீன் 2015 முதல் அக்டோபர் 2017 வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு – முகப்புத்தாள் தைதற்கான செலவின காசோலை வழங்குதல் சார்பு

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கவனத்திற்கு ஜீன்  2015 முதல் அக்டோபர் 2017 வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாளில் முகப்புத்தாள் தைதற்கான செலவின காசோலை வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பி 5 பிரிவு எழுத்தரிடம் 28-12-2018 அன்று மாலை 04.00 மணிக்குள்  உரிய கடிதம் வழங்கி காசோலை பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து உயர் மற்றம் மேல்நிலை பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி  தேர்வு மைய முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி தேர்வு மைய முதல்வர்கள்