ALL GOVT./AIDED MIDDLE/HIGH/HIGHER SEC.SCHOOL HMs/ PRINCIPALS OF MATRIC SCHOOLS -மாவட்ட அளவிலான போட்டிகள் வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் 15.10.2019 அன்று காலை 8.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் தொடங்கப்படவுள்ளது. போட்டிகளில் கலந்துகொள்ளுதல் மற்றும் பார்வையிட கோருதல்

அனைத்து அரசு/நிதியுதவி நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமையாசிரியர்கள்/ / மெட்ரிக்பள்ளி முதல்வர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வாயிலாக அறிவியல் கண்காட்சி மற்றும் ஓவியத் திருவிழா மாவட்ட அளவிலான போட்டிகள் வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் 15.10.2019 அன்று காலை 8.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் தொடங்கப்படவுள்ளது.

       இப்போட்டிகளில், கல்வி மாவட்ட அளவில் கலந்துகொண்டு தேர்ந்தெடுக்கப்படும் முதல் இடம் மற்றும் இரண்டாமிடம் சார்ந்த இரு படைப்புகள் 14.10.2019 அன்று பிற்பகல் 2.00 முதல் 5.00 மணிக்குள் காட்சி அரங்கில் வைக்கப்ட பதிவுகள் மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

       ஓவியத் திருவிழா போட்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளும் தங்களுடைய கலைப்பொருட்களை உரிய அரங்கில் பெயர் பதிவு செய்து அரங்கில் வைக்கப்பட வேண்டும்.

              மாணவ மாணவியர்களை சார்ந்த கல்வி மாவட்ட Website-ல் பட்டியலில் உள்ளவாறு வழிகாட்டி ஆசிரியருடன் காட்சிக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் சரிபார்த்து பாதுகாப்பான முறையில் முன்னேற்பாட்டினை மேற்கொள்ளும் பொருட்டு 14.10.2019 (திங்கள் கிழமை) பிற்பகல் 2.00 மணி அளவில் காட்சி அரங்கில் வைக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முதல் பிரிவு          – 6 முதல் 8ம் வகுப்புகள் வரை

இரண்டாம் பிரிவு – 9 முதல் 12ம் வகுப்புகள் வரை

முதல் பரிசு                 : ரூ.1000/-

இரண்டாவது பரிசு :  ரூ.750/-

மூன்றாவது பரிசு    : ரூ.500/-

பார்வை நேரம் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை

 

கல்லூரிகளில், பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர், பொது மக்கள் அனைவரும் கண்காட்சியினை பார்வையிடலாம் என தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர்,   வேலூர்.