தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 2024 தேர்வு மைய பெயர்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் சார்பு.

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

19-10.2024 அன்று நடைபெறவுள்ள தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தேர்வு நுழைவுச் சீட்டு மற்றும் தேர்வு மைய பெயர் பட்டியல் 14.10.2024 பிற்பகல் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் ( www.dge.tn.gov.in ) தங்கள் பள்ளிக்கான User ID / Password கொண்டு பதிவிறக்கம் செய்துகொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்துடன் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட கடிதம் உரிய நடவடிக்கையின் பொருட்டு இணைத்து அனுப்பலாகிறது.

  முதன்மைக்கல்விஅலுவலர்,

                                                                                                                   வேலூர்.

பெறுநர்:

அனைத்து வகை (அரசு/நகரவை /ஆதிதிராவிட நலம்/ நிதியுதவி/ மெட்ரிக்/ CBSE/ICSE உட்பட)மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்:

  • மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.  
  • மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.