ALL PENDING SCHOOLS – EMIS NEW ENTRY FOR ALL CLASSES SHOULD BE COMPLETED BEFORE 15.07.2018

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,  (அரசு/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் / மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்/ மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள்/ ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் / சி.பி.எஸ்.இ/ ஐ.சி.எஸ்.இ/ கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்)

     வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் (அரசு/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் / மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்/ மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள்/ ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் / சி.பி.எஸ்.இ/ ஐ.சி.எஸ்.இ/ கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ) 2018-19ம் ஆண்டு  ஜீலை முதல் தேதி நிலவரப்படி வருகைப்பதிவேட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ( 1 முதல் 12ம் வகுப்பு வரை  New Entry ) EMIS  பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்னும் 700 பள்ளிகள் (ZERO ENTRY) தங்கள் பள்ளிகளில் புதிதாக பதிவுகள் மேற்கொள்ளாமல் நிலுவையில் உள்ளது. நிலுவையில் உள்ள பதிவேற்றம் செய்யப்படாத பள்ளிகள் 15.07.2018க்குள் பதிவேற்றம் மேற்கொள்ள தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட நாட்களுக்குள் EMIS  பணிகள் முடிக்கப்படாத பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் துறைக்கு உரிய விளக்கத்தை அளிக்க  நேரிடும் என்று எச்சரிக்கை செய்யப்படுகிறது. எனவே, EMIS பதிவேற்றத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு உரிய காலத்திற்குள் முடித்திடுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஒவ்வொரு பள்ளிகளின் EMIS  பதிவேற்றம் செய்த விவரத்தை தங்கள் பள்ளிக்குரிய USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி DATA என்ற இணைப்பில் சென்று பதிவிறக்கம் செய்து சரிபார்த்து நிலுவை பதிவுகளை ஒரு வாரத்திற்குள் முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

 

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST

 

முதன்மைக் கல்வி அலுவலர். வேலூர்