அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம்
நாளை 23.8.2023 புதன்கிழமை அன்று காலை 9:30 மணி அளவில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/நகரவை/ஆதி திராவிடர் நல மற்றும் நிதி உதவி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பாட ஆசிரியர்களுக்கான சிறப்பு புத்தாக்க பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் நாளை காலை 10 .00 மணி அளவில் சென்னாங்குப்பம் ஸ்ரீ வித்யா லட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளதால் கீழ் குறிப்பிட்டுள்ள அட்டவணையின் படி உரிய நேரத்தில் உரிய பாட ஆசிரியரை கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள விடுவித்து அனுப்புமாறும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
மேலும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பாட ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் எஸ்.எம்.சி மூலமாக பணிபுரியும் முதுகலைப் பாட ஆசிரியர்களையும் உரிய நேரத்தில் விடுவித்து அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
நாள்: 23.08.2023 ( புதன் கிழமை)
நேரம் : காலை 9.30 மணி
( இயற்பியல், வேதியியல்,கணிதம்,உயிரியல்,விலங்கியல் மற்றும் தாவரவியல் பாட ஆசிரியர்கள்)
பிற்பகல் : 1.30 மணி
( தமிழ், ஆங்கிலம்,பொருளியல்,வணிகவியல், வரலாறு,தொழிற்கல்வி ஆசிரியர்கள், கணக்குப்பதிவியல், புவியியல், உருது ஆசிரியர்கள் மற்றும் கணினி அறிவியல்)
இடம் : ஸ்ரீ வித்யா லட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
சென்னாங்குப்பம்.
தலைமை ஆசிரியர்கள் மேலே குறிப்பிட்டுள்ள கால அட்டவணையின் படி உரிய முதுகலைபாட ஆசிரியர்களை சரியான நேரத்தில் கூட்டத்தில் கலந்து கொள்ள ஏதுவாக விடுவித்து அனுப்புமாறும் கூட்டம் நிறைவு பெற்றவுடன் மீண்டும் பள்ளிக்குச் செல்லும் படி அறிவுறுத்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
//ஓம். செ.மணிமொழி//
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.
நகல்
வேலூர் மாவட்டக்கல்வி அலுவலர் (இடைநிலை) தொடர் நடவடிக்கையின் பொருட்டு