NMMS-தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு -2023-தேர்வு நாள் 25.02.2023 -தேர்வு மையம் மற்றும் இணைப்பு பள்ளிகள் விவரம் –தெரிவித்தல் –சார்பு   

அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

 தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் தேர்விற்கு நாள்: 25.02.2023 அன்று நடைபெறவுள்ள தேர்வு மையங்கள் மற்றும் இணைப்பு பள்ளிகளின் விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையமாக தெரிவு செய்யப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு நடத்துவதற்கான தேர்வெழுத தேவையான அறைகளுடன் கூடிய இருக்கை வசதி, தடையில்லா மின்சாரம் , கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி செய்து  எவ்வித குறைபாடுகளும் இருக்காவண்ணம் உறுதிசெய்துகொள்ள தேர்வு மைய பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

ஒப்பம் .க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,வேலூர் மாவட்டம் .

சார்ந்த தேர்வு மைய பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/ தொடக்கக்கல்வி) தொடர்நடவடிக்கையின் பொருட்டு