20.04.2022 மற்றும் 21.04.2022 ஆகிய தேதிகளில் மண்டல வாரியான ஆய்வுக்கூட்டம் நடைபெறுதல் – இயக்குநர்கள் & இணை இயக்குநர்கள்- மாவட்டங்களில் களப்பணி மேற்கொள்ளுதல் – தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல்

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் , மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெறுதல் தொடர்பாக இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கள பணி மேற்கொள்ளும் பொருட்டு 20.04.2022 மற்றும் 21.04.2022 ஆகிய நாட்களில் வருகை புரிய இருப்பதால் பள்ளிகளில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமையாசிரியர்களுக்கு கீழ்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.
  • பள்ளி வளாகம் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
  • வகுப்பறைகள் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும்.
  • குடிநீர் வசதி
  • கழிப்பறைகள் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
  • கற்றல் மற்றும் கற்பித்தல் நிகழ்வுகளில் வழக்கமாக பின்பற்றப்படும் இரண்டுவரி, நான்குவரி, கட்டுரை நோட்டுப்புத்தகங்கள் யாவும் அந்தந்த வகுப்பு மற்றும் பாட ஆசிரியர்களால் திருத்தம் செய்து மாணவர்களால் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நாளது தேதிவரை வகுப்பாசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்கள் கையொப்பமிட்டு தயார் நிலையில் வைக்க வேண்டும்.
  • அறிவியல் சார்ந்த  செய்முறை நோட்டுபுத்தகம் மற்றும் Assignment Notebook.
  • கணிதம் பாட Graph Note மற்றும் Geometry Note.
  • வரலாறு மற்றும் புவியியல் பாடங்கள் சார்ந்த வரைபட புத்தகம்.
  • இலவச நல திட்ட விவரங்கள் தயார் நிலையில் வைக்கப்படவேண்டும்.
  • தினசரி நடைபெறும் Quiz Programme வகுப்பு வாரியாக மாணவர்கள் பங்கேற்ற விவர பதிவேடு.
  • அனைத்து அலுவலக பதிவேடுகள் தயார்நிலையில் வைக்கப்பட வேண்டும்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.