10ம் வகுப்பு , 11 மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வு பெயர் பட்டியலில் மொழிப்பாடம் மற்றும் பயிற்று மொழி திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான செய்தி

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

தேர்வுகள் மிக அவசரம் மற்றும் தனி கவனம்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கனிவான கவனத்திற்கு

நடைபெறவுள்ள மே-2022 பத்தாம் வகுப்பு , மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கு மொழிப்பாடம் மற்றும் பயிற்று மொழி ஆகியவற்றில் திருத்தம் ஏதேனுமிருப்பின்அதன் விவரங்களை உடனடியாக வேலூர் மாவட்டம், கல்புதூர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களின் அலுவலக மின்னஞ்சல் முகவரியான addge.velre@gmail.com –க்கு உரிய விவரங்களுடன் அனுப்பி வைக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவற்றின் அடிப்படையாகக் கொண்டே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் திருத்தம் செய்து வழங்க இயலும் என்ற விவரமும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்