பள்ளிக்கல்வி துறையில் பணிபுரியும் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளஅறிவுறுத்தல்

பள்ளியில் அனைத்துவகை ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசி போட்டு விட்டார்களா என உறுதி செய்தல் வேண்டுமெனவும், ஆசிரியர்கள்/ ஆசிரியரல்லாத பணியாளர்கள் ஒன்று/ இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்கள் விவரம் தலைமையாசிரியர் மேசையில் வைக்கப்பட வேண்டுமெனவும்,, தடுப்பூசி போட்டமைக்கான சான்றினையும் 13.09.2021க்குள் பெற்று தொகுத்து வைக்கவேண்டுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

                        மேலும், பள்ளியில் பயிலும் மாணாக்கர்களின் பெற்றோர்களிடம் தொலைபேசி மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் மேற்கூறியவாறு கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென வகுப்பாசிரியர் மூலமாக விழிப்புணர்வினை ஏற்படுத்திடுமாறு  கேட்டுக்கொள்வதுடன் இரு தினங்களுக்குள் சிறப்பு, முகாம்களை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ள பெற்றோர்களுக்கு தெரிவிக்குமாறும் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. படிவத்தில் கோரப்பட்ட விவரத்தினை 13.09.2021 திங்கட்கிழமைக்குள் தவறாமல் ஒப்படைக்கும்படியும் தவறும் பட்சத்தில் தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி படிவம் மற்றும் விவரங்களை தொகுத்து வேலூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படிகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.