வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்காக 26-05-2021முதல் 28-05-2021வரை (புதன்கிழமை,வியாழன், வெள்ளி) மூன்று நாட்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுவரையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் அனைவரும் கல்வித்துறைக்கென ஒதுக்கப்பட்டுள்ள மையங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தெரிவித்தல்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும்

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் மிக முக்கியமான அவசர தகவல்:

வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைத்து வட்டார கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.  வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்காக 26-05-2021முதல் 28-05-2021வரை (புதன்கிழமை,வியாழன், வெள்ளி)  மூன்று நாட்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

அனைத்துவகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் அனைவரும் (மெட்ரிக் பள்ளிகள் உட்பட) கீழ்காணும் மையங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

இதுவரையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1) ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, வேலூர்

2) டான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காட்பாடி

3) அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அனைக்கட்டு

4) அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நெல்லூர்பேட்டை, குடியாத்தம்

வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார கல்வி அலுவலர்களும் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக நடைபெறும் ஏதேனும் ஒரு சிறப்பு முகாமில் தடுப்பூசி முதல் தவணையினை போட்டுக்கொண்டு அனைவரும் கோவிட் வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வது மிக மிக அவசியம் என மதிப்புமிக்க வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கியுள்ள அறிவுரையின்படி  செயல்பட அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CEO, VELLORE