6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு தொழிற்கல்வி / மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது

அனைத்துவகை அரசு நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

பள்ளிக்கல்வித்துறை தமிழக அரசு,  6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு தொழிற்கல்வி / மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு அரசு பள்ளியில் 6 முதல் 12 வரை பயின்ற மாணவர்கள்  சான்று கோரும்போது எவ்வித காலதாமதமின்றி சான்றுகளை சரிபார்த்து உடனடியாக வழங்க அனைத்துவகை அரசு நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்