தேர்வுப் பணி – பிப்வரவரி -2025 மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறை தேர்விற்கான புறத்தேர்வர்கள் நியமன ஆணை பெற்று செல்ல தனிநபர் மூலம் பள்ளி தலைமை ஆசிரியரின் முகப்புக் கடிதத்துடன் பெற்று செல்ல தெரிவித்தல் – தொடர்பாக
அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2025 – புறத்தேர்வர்கள் நியமன ஆணை நாளை காலை 01-02-2025 அன்று முற்பகல் 10.00 மணி முதல் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் ( மேல்நிலை ) அவர்களிடம் தங்கள் பள்ளிகான முகப்பு கடிதத்தினை வழங்கி தங்கள் பள்ளிக்குரிய ஆணையினை பெற்று செல்லுமாறு தெரிவிக்கலாகிறது.
//ஒம் .செ.மணிமொழி//
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.
பெறுநர்
அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்) வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது