2023-2024ஆம் கல்வியாண்டிற்கான புதுக்கோட்டை மாவட்டத்தில் மாநில அளவிலான   குடியரசு தின குழுப்போட்டி – ஒத்திவைக்கப்பட்ட கபாடி மற்றும் கோகோ போட்டிகள் நடைபெறும் இடங்கள் தகவல் தெரிவித்தல் – சார்பு

2023 -2024ஆம் கல்வியாண்டிற்கான புதுக்கோட்டை மாவட்டத்தில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கபாடி மற்றும் கோ கோ போட்டிகள் 16.02.2024 முதல் 18.02.2024 வரை மாணவிகளுக்கு 19,02.2024 முதல் 21.02.2024 வரை மாணவர்களுக்கு நடைபெற உள்ளது. அதன்பொருட்டு வேலூர் மாவட்டத்தின் சார்பாக மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவியர்களை உரிய பாதுகாப்புடன் அழைத்து சென்று போட்டியில் பங்கேற்க செய்ய உடற்கல்வி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தும்படி சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் போட்டியின் விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்

அரசு/நிதியுதவி/ மெட்ரிக் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.