2021-2022- ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – மாநில மற்றும் மாவட்டதிட்ட அலுவலகங்கள், வட்டார வள மையங்களில் பணிபுரிந்துவரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு (BRTE) பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு 15.09.2021 அன்று காலை 8.30 மணிக்கு காட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் (SSA) நடைபெறுதல்

2021-2022- ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – மாநில மற்றும் மாவட்டதிட்ட அலுவலகங்கள், வட்டார வள மையங்களில் பணிபுரிந்துவரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு (BRTE) பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு 15.09.2021 அன்று காலை 8.30 மணிக்கு காட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும்படி சார்ந்த ஆசிரியர் பயிற்றுநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சார்ந்த வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் சம்மந்தப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்களை நாளை (15.09.2021) காலை 8.30 மணிக்கு காட்பாடி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்ள மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளத்தக்க வகையில் விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்