10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ( TML COPY ) பதிவிறக்கம் செய்தல் சார்பான செய்தி

அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மே 2022ம் மாதத்தில் நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பான தேர்வு முடிவுகள் 20-06-2022 அன்று வெளியிடப்படவுள்ளது. மற்றும் பள்ளி அளவில் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ( TML COPY ) சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வகையில் பள்ளி தகவல் பலவை மூலமாக தெரிவிக்குமாறு அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் மேற்காண் பொருள் சார்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெற்றப்பட்ட கடிதம் தகவலுக்காக இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்விஅலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.