1 முதல் 12ஆம் வகுப்பு வரை 2020-21ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணாக்கர்களுக்கு EMIS Portal-ல் தேர்ச்சி விவரங்கள், நலதிட்டங்கள் வழங்கும் பொருட்டு மாணவர் விவரங்கள், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பணிமாறுதல், பதவி உயர்வு, மாறுதல் கலந்தாய்வு ஆகியவை மேற்கொள்ள விவரங்கள் EMIS Portal வழியாக நடத்தப்படஉள்ளதால் அனைத்து விவரங்களையும் அவ்வப்போது (Current Updation) உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் /வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு,

1 முதல் 12ஆம் வகுப்பு வரை 2020-21ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணாக்கர்களுக்கு EMIS Portal-ல் தேர்ச்சி விவரங்கள், நலதிட்டங்கள் வழங்கும் பொருட்டு மாணவர் விவரங்கள், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பணிமாறுதல், பதவி உயர்வு, மாறுதல் கலந்தாய்வு ஆகியவை மேற்கொள்ள விவரங்கள் EMIS Portal வழியாக நடத்தப்படஉள்ளதால் அனைத்து விவரங்களையும் அவ்வப்போது (Current Updation) உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இது மிகவும் முக்கியம் என்பதால் தனி கவனம் செலுத்தி  EMIS Portal-ல் Current Updation செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.