வேலூர் மாவட்டம் – 2021-2022 ஆம் ஆண்டிற்கான RTE 25 % இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை நடைபெறுதல் – தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அவர்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் ஆய்வு மேற்கொள்ளுதல் – மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம்- தொடர்பாக

வேலூர் மாவட்டம் – 2021-2022 ஆம் ஆண்டிற்கான RTE 25 % இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை நடைபெறுதல் – நாளை 19.08.2021 தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அவர்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் ஆய்வு மேற்கொள்ளவுள்ளதால் RTE 25% நுழைவு நிலை சேர்க்கைக்கு ஆய்வு பணி மேற்கொள்ளவுள்ள தலைமைஆசிரியர்கள் / வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் ஆகியோர் நாளை 19.08.2021 அன்று தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மெட்ரிக் மற்றும் நர்சரி / பிரைமரி பள்ளிகளுக்கு காலை 1மணி நேரத்திற்கு முன்பாக சென்றடையுமாறும் இணைப்பில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமளிக்கா வண்ணம் செயல்படுமாறும் மீள அறிவுறுத்தப்படுகிறது.

மேற்காண் பொருள் தொடர்பாக நாளை 19.08.2021 அன்று முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரின் தலைமையில் நடைபெறவுள்ள வட்டராக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டத்தில் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கீழே குறிப்பிட்டுள்ள படிவத்தில் சார்ந்த பள்ளி முதல்வர் / தாளாளர்/ வட்டாரக் கல்வி அலுவலர்கள் / வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநரின் கையொப்பத்துடன் 4 நகல்களில் முதன்மைக் கல்வி அலுவலக அ2 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், (கூ.பொ)

வேலூர்

பெறுநர்

அனைத்து தலைமைஆசிரியர்கள் / வட்டாரக் கல்வி அலுவலர்கள் / ஆசிரியர் பயிற்றுநர் /

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.