வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியாற்ற உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் தபால் வாக்கு சார்பாக அறிவுரைகள்

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியாற்ற உள்ள அனைத்து ஆசிரியர்களின் கவனத்திற்கு .,

வரும் 7-4-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து பணியாளர்களுக்கும் இரண்டாம் கட்ட பயிற்சி முகாம்கள் அவர்கள் பணியாற்ற உள்ள சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள பயிற்சிமையங்களில் நடைபெற உள்ளது.

 

அச்சமயம் தகுதியுள்ள அனைத்து பணியாளர்களுக்கும் தபால் வாக்கு சீட்டுகளும், தேர்தல் பணி சான்றுகளும் வழங்கப்பட உள்ளது. மேற்படி தபால் வாக்கு சீட்டினை பயன்படுத்தி பயிற்சி மையத்திலேயே வாக்களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இதற்கென தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை தவறாமல் கொண்டு வரவேண்டும். மேற்படி வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து தேர்தல் பணியாளர்களும் தங்களது வாக்கினை விடுபடாமல் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.