வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் வெளியிடுதல் சார்பு.

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக இணையதளம் மூலும் பெறப்பட்டது. பெறப்பட்ட விவரங்கள் தற்போது இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. எவரது பெயர்கள் விடுபட்டிருந்தால் 08-04-2022 அன்று பிற்பகல் 02.00 மணிக்குள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவு எழுத்தரிடம் விடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்கள் ஒப்படைக்குமாறு அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.