விளையாட்டு போட்டிகள் – பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளினை சிறப்புற கொண்டாடும் வகையில் 15-09-2022 அன்று விரைவு மிதிவண்டி போட்டி நடைபெறுதல் பள்ளி மாணவ மாணவியர்களை போட்டியில் பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ள கோருதல் சார்பு

அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளினை சிறப்புற கொண்டாடும் வகையில் 15-09-2022 அன்று வேலூர் மாவட்டத்தில் இணைப்பில் காணும் விவரம்படி விரைவு மிதிவண்டி போட்டி நடைபெறவுள்ளது. அப்போட்டியில் வேலூர் மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவ மாணவியர்களை பாதுகாப்பாக போட்டியில் பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

மாவட்ட உடற் கல்வி ஆய்வாளர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.