வினாத்தாள் பகிர்வு மைய தலைமையாசிரியர்களுக்கு வினாத்தாட்கள் வழங்குதல் சார்பாக அறிவுரைகள்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்  கவனத்திற்கு,

              வினாத்தாள் பகிர்வு மையங்களுக்கு இன்று (09.12.2019) மாலை முதல் வினாத்தாள் கட்டுக்கள் வழங்கப்படும். வினாத்தாள் பகிர்வு மைய தலைமையாசிரியர்கள் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு தனி அறையிலும், நடுநிலைப்பள்ளிகளுக்கு தனி அறையிலும் அடுக்கி பள்ளி வாரியாக வைக்கப்பட வேண்டும். நாளை காலையில் பள்ளியிலிருந்துவரும் ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்குரிய மற்றும் எண்ணிக்கை சரிபார்த்து வினாத்தாள் கட்டுக்களின் மீது தேதியினை குறிப்பிட்டு வினாத்தாள் பகிர்வு மையத்திலேயே வைக்க அறிவுறுத்தப்படுகிறது.

            வினாத்தாள் பகிர்வு மைய தலைமையாசிரியர்கள் வினாத்தாட்கள் எடுக்கும்போது தேதி, நேரம், கட்டுக்கள் எடுக்கும் ஆசிரியர் பெயர், கைபேசி எண் ஆகியவற்றை பதிவேட்டில் குறித்து வைக்க வேண்டும். பள்ளித் தலைமையாசிரியர் வினாத்தாள் கட்டுக்கள் பெறப்பட்ட நேரத்தையும் அறைவாரியாக வினாத்தாள் அளித்த விவரம்,  மீதமுள்ள வினாத்தாட்கள் விவரமும் தனி பதிவேட்டில்  குறிக்க வேண்டும்.

            இப்பதிவேட்டை உயர் அலுவலர்கள் பார்வையின்போது முன்னிலைப்படுத்த வேண்டும். தற்போது நடைபெறும் 2ம் பருவம்/ அரையாண்டுத்தேர்வை எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் சிறந்த முறையில் நடத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்