மே 2022 – 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பாக படிவம் 1,2,3 ஒப்படைக்காத தலைமை ஆசிரியர்கள் இன்று பிற்பகல் 3.00 மணிக்குள் ஒப்படைக்க கோருதல்

கீழ்க்காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மே 2022 – 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பான விவரங்கள் பள்ளிகளிலிருந்து 1, 2, மற்றும் 3 படிவங்கள் பூர்த்தி செய்து ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது. இதில் 10ம் வகுப்பு படிவம் 3 மட்டும் இதுநாள் ஒப்படைக்காத பள்ளிகள் விவரம் கீழ்வருமாறு தெரிவிக்கப்படுகிறது. பல நினைவூட்டுகள் அளித்தும் இதுநாள் வரை கீழ்க்குறிப்பிட்டுள்ள பள்ளிகளிலிருந்து விவரங்கள் பெறப்படவில்லை இது வருந்ததக்க செயலாகும். தாங்கள் விவரங்கள் ஒப்படைக்காமல் இருப்பதினால் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு உரிய நேரத்தில் விவரங்கள் ஒப்படைக்காத சூழ்நிலை தங்களால் ஏற்பட்டுள்ளது. காலதாமதத்திற்கான விளக்கத்துடன் இன்று பிற்பகல் 03.00 மணிக்குள் 1,2 மற்றும் 3 படிவங்கள் பூர்த்தி செய்து வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக தட்டச்சர் திரு. அழகன் என்பாரிடம் நேரில் ஒப்படைக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கீழ்க்குறிப்பிட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விவரங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் விவரம்

  1. பாஸ்மார்பென்டா, 2. அரவட்லா,3. பிச்சாநத்தம்,4. இடையன்சாத்து, 5. பத்தலபள்ளி, 6.கல்லூர், 7. சேம்பள்ளி, 8. மேல்மாயில், 9. செட்டிக்குப்பம்,10. ஆர். வெங்கடாபுரம், 11. ரமிஸியா ஓரண்டல் பேர்ணாம்பட்டு

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

மேற்குறிப்பிட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.