மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு 2021 – பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது சரிபார்ப்பு செய்ய கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

2021ம் ஆண்டு நடைபெறவுள்ள   மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு தொடர்பான மாணவர்களின் பெயர் பட்டியலில் உள்ள திருத்தங்கள் பள்ளிகளிலிருந்து பெறப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது அந்த திருத்தங்கள் தங்கள் பள்ளியின் Login மூலம் அரசுத் தேர்வுகள் இணையதளத்திற்கு சென்று பெயர் பட்டியலில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளதாக என  சரிபார்க்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்   வேலுர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.