மிக மிக அவசரம்- மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் – வேலூர் மாவட்டம் – இலவசக் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் கேட்பு தொகை பெற பள்ளி வங்கி கணக்கு சரிபார்த்தல் – தொடர்பாக

மெட்ரிக் பள்ளிகள் – வேலூர் மாவட்டம் – இலவசக் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் கேட்பு தொகை பெற கீழ்க்காணும் பள்ளிகள் தங்கள் பள்ளிக்குரிய வங்கி கணக்கு எண்ணினை சரிபார்த்து சரியாக இருக்கும் பட்சத்தில் வங்கி கணக்கு முதல் பக்க நகல் உடன் சமர்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வங்கி கணக்கு மாற்றம் இருப்பின் முகப்பு கடிதத்துடன் வங்கி கணக்கு முதல் பக்க நகலுடன் ஒப்படைக்க சார்ந்த மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு :

2019- 2020 ஆம் கல்வியாண்டு முதல் பள்ளிகள் மூடப்பட்டிருப்பின் உரிய கடிதத்துடன் தாளாளர் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

முதன்மைக்கல்வி அலுவலர்,

வேலூர்

பெறுநர்

அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர்கள் / முதல்வர்கள்

நகல்

வேலூர் ,மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது.