மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – அரசு / அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள் – 2020-2021ஆம் கல்வியாண்டு 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல் – சார்பு

அரசு / அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2020-2021ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற அனைத்து மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களையும் EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்து முடிக்கும்படி தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தெரிவிக்கப்பட்டும் பெறும்பாலான பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் வங்கி கணக்கு விவரங்கள் உள்ளீடு செய்யப்படாமல் இருப்பது தெரிய வருகிறது. எனவே, சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தனிகவனம் செலுத்தி விடுபட்ட மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களையும் இன்று (10.11.2021) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி தெரிவிக்கப்படுகிறது.

இது மிகவும் அவசரம்

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்