மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2020-2021ஆம் கல்வியாண்டு 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது – மீளவும் சரிசெய்து அனுப்பக் கோருதல் – சார்பாக

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2020-2021ஆம் கல்வியாண்டு 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்கள் மீளவும் சரி செய்து 24.01.2022க்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து அரசு / அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.