அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு –
இன்று 26.03.2025 அனைத்து பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பள்ளியின் பாதுகாப்பு சார்ந்து பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்திட இவ்வலுவலக செயல்முறைகள் கடித ந.க.எண்.4723/ஆ5/2024, நாள். 17.03.2025 மற்றும் 25.03.2025 வாயிலாக தெரிவிக்கப்பட்டது. எனவே இன்று பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்தப்பட்டமைக்கான விவரங்கள் தற்போது பள்ளிக் கல்வி இயக்ககத்திலிருந்து Google Form மூலம் கோரப்பட்டுள்ளது. எனவே கீழ்காணும் படி Google Formல் கோரப்பட்டுள்ள விவரங்களை இன்று மாலை 3.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
https://forms.gle/f6bwpPsuArnhNHCw6
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
பெறுநர்
அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.
(தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை / தனியார் பள்ளிகள்)
வேலூர் மாவட்டம்.
நகல் –
மாவட்டக் கல்வி அலுவலர்கள்,
(இடைநிலை / தொடக்கக் கல்வி/ தனியார் பள்ளிகள்)
(தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)