அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
பள்ளிக்கல்வி – மானியக் கோரிக்கை – 2022-2023ஆம் கல்வியாண்டு – சதுரங்க ஒலிம்பியாட் – பள்ளி, வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் மாணவர்களுக்கு சதுரங்கப் போட்டிகள் நடத்துதல் சார்பாக அனைத்து அரசு நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குநர்கள் (நிலை 1 மற்றும் 2), உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 01.07.2022 அன்று ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி வேலூர், அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இப்புத்தாக்க பயிற்சியில் கொள்ளும் பொருட்டு உடற்கல்வி இயக்குநர்கள் (நிலை 1 மற்றும் 2), உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.