நினைவூட்டு – 1 – பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு உதவி பெறும் பள்ளிகள்- 2023 -2024 ஆம் கல்விஆண்டிற்கான பணியாளர் நிர்ணய அறிக்கையின் படி உபரி ஆசிரியர் பணியிட விவரங்கள் அனுப்புதல் – சார்ந்து

சார்ந்த அரசு உதவி பெறும் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டம், அரசு உதவி பெறும் பள்ளிகள்- 2023 -2024 ஆம் கல்விஆண்டிற்கான பணியாளர் நிர்ணய அறிக்கையின் படி உபரி ஆசிரியர் பணியிட விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து பள்ளியின் கூட்டு மேலாண்மை நிர்வாகி மற்றும் சார்ந்த பள்ளி தாளாளரின் மேலொப்பம் பெற்று 25.11.2023 அன்று இவ்வலுவலக ஆ3 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுநாள் வரை இணைப்பில் கண்டுள்ள பள்ளிகள் உரிய படிவங்கள் ஒப்படைக்கவில்லை. எனவே உடனடியாக இன்று மாலை (29.11.2023) 6.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு இணைப்பில் கண்டுள்ள  அரசுஉதவி பெறும் உயர்/மேல் நிலை பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு  தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர்

வேலூர்