அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் /ஏப்ரல் – 2025 மாதத்தில் நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பான தேர்வு முடிவுகள் நாளை 16.05.2025 அன்று வெளியிடப்படவுள்ளது. பள்ளி அளவில் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ( TML COPY ) சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து 16.05.2025 அன்று காலை10.00 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ,அதே போல் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்தொடர்பான பள்ளி அளவில் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ( TML COPY ) -னை 16.05.2025 அன்று பிற்பகல் 3.00 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் மேற்காண் பொருள் சார்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெற்றப்பட்ட கடிதம் தகவலுக்காக இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகளின் படி செயல்படுமாறு அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
//ஓம்.//
இணைப்பு : கடித நகல் முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்
அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர்(இடைநிலை /தனியார் பள்ளிகள்) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.