அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு,
வருகின்ற 26.03.2025 புதன்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணி முதல் கீழ்கண்ட மருத்துவ ஆய்வுக்குழு/பாரத சாரண சாரணியர்/ஜுனியர் ரெட் கிராஸ் ஆகிய செயல்பாடுகளுக்கு செலுத்த வேண்டிய சந்தா தொகையை காந்திநகர், SSA அலுவலகத்தில் இருக்கும் சார்ந்த பொறுப்பாளர்கள்/ ஒருங்கிணைப்பாளர்களிடம் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
- மருத்துவ ஆய்வுக் குழு – 2024 -2025 கல்வி ஆண்டு மருத்துவ ஆய்வுக்குழு கட்டணமாக ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.1/-வீதம் தங்கள் பள்ளியில் பயிலும் மொத்த மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கணக்கிட்டு ரொக்கமாக பணத்தை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளவும். தொடர்புக்கு – திரு.ஐ.உமாதேவன், தலைமையாசிரியர், அலைபேசி எண்.9894235031, திரு.குணசேகரன், தலைமையாசிரியர், அலைபேசி எண்.9488634903
- பாரத சாரண சாரணியர் – 2024 -25 கல்வி ஆண்டு பாரத சாரண சாரணியர் பள்ளி ஒன்றுக்கு பதிவு கட்டணம் ரூ.800/- செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளவும். தொடர்புக்கு – திரு. A. சிவக்குமார், தலைமையாசிரியர், Cell: 9600427292 , திரு.P. சங்கர், தலைமையாசிரியர், Cell :9442314923
- ஜுனியர் ரெட் கிராஸ் – 6,7,8 வகுப்புகளில் பயிலும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ரூ.2/- ம் 9 முதல் 12 பயிலும் மாணவர்களுக்கு ரூ.4/- வீதம் கணக்கிட்டு மொத்த தொகையில் 10 சதவீதம் கட்டணத்துடன் பதிவு கட்டணம் ரூ.50/- ம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளவும். தொடர்புக்கு – திரு.சிவவடிவு, தலைமையாசிரியர், Cell:9944141099
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.