சுதந்திர தின விழா 2020 – 15.08.2020 (சனிக்கிழமை)அன்று இந்திய திருநாட்டின் 74வது சுதந்திர தின விழாவினை அனைத்து சார்நிலை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் கொண்டாடுதல்

அனைத்துவகை தொடக்க/நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

 

வேலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள அனைத்துவகை சார்நிலை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் இந்திய திருநாட்டின் 74வது சுதந்திர தின விழாவினை 15.08.2020 அன்று இணைப்பில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளில் அறிவுறுத்தப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி எளிய முறையில் சிறப்பாக கொண்டாடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சுதந்திர தின விழாவினை கொண்டாடிய விவரம் மற்றும் புகைப்படங்களை இவ்வலுவலக மின் அஞ்சல் (velloreceo@gmail.com) முகவரிக்கு அனுப்பிவைக்கும்படி  மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் தொடக்க/ நடுநிலை, உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DSE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்