சிறப்புக்கட்டண இழப்பீட்டுத்தொகை 2021-2022 – அரசு/நகராட்சி/அரசு உதவி பெறும் (சுயநிதிப் பிரிவு தவிர்த்து) பள்ளித் தலைமையாசிரியர்கள்- EMIS – கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையத்தில் பதிவேற்றம் செய்த மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப (31-10-2021 நிலவரப்படி) சிறப்புக்கட்டண இழப்பீட்டுத் தொகை வழங்க ஏதுவாக விவரங்கள் நாளது தேதிவரை சமர்ப்பிக்காத பள்ளிகள் உடனடியாக 02.11.2021 பிற்பகல் 2.00 மணிக்குள் சமர்ப்பிக்க தெரிவித்தல்

அரசு/நகராட்சி/அரசு உதவி பெறும் (சுயநிதிப் பிரிவு தவிர்த்து) பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு

          2021-2022ஆம் கல்வியாண்டிற்கான சிறப்புக்கட்டண இழப்பீட்டுத்தொகை வழங்க ஏதுவாக இணைப்பிலுள்ள செயல்முறைகளைப் பின்பற்றி படிவங்களைப் பூர்த்தி செய்து (31-10-2021 நிலவரப்படி) 02.11.2021 பிற்பகல் 02,00 மணிக்குள் இவ்வலுவலக அ3 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து  அரசு/நகராட்சி/அரசு உதவி பெறும் (சுயநிதிப் பிரிவு தவிர்த்து) பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர்,

வேலூர்.