அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் விழா மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் தலைமையில் இணைப்பிலுள்ள பள்ளி மாணவர்களுக்கு (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) மலபார் கோல்டு நிறுவனம் மூலம் (15.02.2023) புதன்கிழமை காலை 08.30 மணிக்கு வேலூர்( பழைய பேருந்து நிலையம் ) டவுன் ஹாலில் வழங்கப்படவுள்ளது. எனவே, சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தெரிவித்து, பள்ளி சீருடை மற்றும் மாணவர் அடையாள அட்டையுடன் ஒரு பொறுப்பான ஆசிரியரை நியமித்து பாதுகாப்பான முறையில் சரியான நேரத்தில் மேற்காண் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்கள் உதவித்தொகை பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர் –
சார்ந்த மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்,
வேலூர் மாவட்டம்.