கொரோனா நோய் தடுப்பு பணி செய்த ஆசிரியர்களுக்கு பாராட்டு

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

கொரோனா நோய் தடுப்பு பணிகளில் தன்னார்வத்துடன் இணைத்துக்கொண்டு வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் அழைப்பினை ஏற்று பணிகளை செய்த ஆசிரிய ஆசிரியைகள் அனைவருக்கும் 03.03.2022 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் வேலூர் மாவட்ட ஜுனியர் ரெட்கிராஸ் அலுவலகம், பிள்ளையார் கோயில் தெரு, விருதம்பட்டு, மோட்டூர் (குமரன் மருத்துவமனை பின்புறம்) சான்றிதழ் வழங்கி பாராட்டும் விழா நடைபெற உள்ளது பட்டியல் இணைக்கப்பட்டுள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தவறாது பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மேலும் சார்ந்த ஆசிரியர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கும் வகையில் தலைமையாசிரியர்கள் பணிவிடுப்பு செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்