எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021-ஐ முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலர்களும் கோவிட்-19 தடுப்பூசியினை செலுத்திக்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து வகைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021-ஐ முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலர்களும் கோவிட்-19 தடுப்பூசியினை செலுத்திக்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, அனைத்துவகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர் தேர்தல் பணியில் ஈடுபடும் முன்பாக இணைப்பில் குறிப்பிட்டுள்ள காலக்கெடுவிற்குள் இரண்டு டோஸ் கோவிட்-19 தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளுமாறு வேலூர் மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்துடன் இணைப்பில் உள்ள செய்திக்குறிப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி  வாக்குப்பதிவு நாளுக்கு முன்பாக கோவிட்-19 தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளும்படி அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு  அறிவுறுத்தும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE  PRESS RELEASE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்