அவசரம் -தனிகவனம்-தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –2022-2023 கல்வியாண்டு மார்ச்/ஏப்ரல்-2023 மேல்நிலை பொதுத்தேர்வு –விடைத்தாள் திருத்தும்  பணி – –விருப்பமுள்ள விடைத்தாள் திருத்தும் மையம் தேர்வு செய்து அனுப்புதல் – சமர்பிக்காத பள்ளிகள் -உடன் சமர்பிக்க -தெரிவித்தல் -சார்பு

சார்ந்த அரசு /நகரவை /ஆதிதிராவிடர்நல /அரசு நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

            நடைபெறவிருக்கும் 2022-2023 ஆம் கல்வியாண்டு மார்ச் /ஏப்ரல் 2023 மேல்நிலை பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு  வேலூர் மாவட்டத்தில் கீழ்கண்ட பள்ளிகள் விடைத்தாள் திருத்தும் மையங்களாக செயல்பட பார்வையில் காணும் அரசுத் தேர்வுகள் இணைஇயக்குநர் (மேல்நிலை)  அவர்களின் செயல்முறைகளின் படி ஆணையிடப்பட்டுள்ளது.

  1. (மைய எண் : 64 )செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி,வேலூர்
  2. (மைய எண் :77) திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி குடியாத்தம்,வேலூர்.

மேலும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு முதுகலை ஆசிரியர்கள் விரும்பும்  விடைத்தாள் திருத்தும்  மையத்திற்கு இணைப்பில் காணும் Google Form-ல் பதிவுகள் மேற்கொண்டு ஆசிரியர்களிடமிருந்து கையொப்பம் பெற்ற ஒரு பிரதி மற்றும் வருகை பதிவேடு நகல்  தொகுத்து தனிநபர் மூலம்   31.01.2023 அன்று மாலை  4.00 மணிக்குள்  வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவில் நேரில் சமர்பிக்க  பள்ளித்தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்களுக்கு  தெரிவிக்கப்பட்டது.

எனினும் இதுநாள் வரை ஒரு சில பள்ளிகளே  விவரங்களை சமர்ப்பித்துள்ளனர்.மேற்காணும் தகவல் அரசுதேர்வுகள் இயக்ககத்திற்கு அனுப்ப இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கீழ்காணும் பள்ளிகள் 03.02.2023 இன்று மாலை  3.00 மணிக்குள்  வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு மீள தெரிவிக்கப்படுகிறது.

https://forms.gle/8MvNWDdQBzeP8kQb9CLICK TO UPLOAD TO THE DETAILS

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்:

   அரசு /நகரவை /ஆதிதிராவிடர்நல /அரசு நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

நகல் :

 வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  )தொடர்நடவடிக்கையின் பொருட்டு