அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01.01.2022 நிலவரப்படி பணிமாறுதல் / பதவி உயர்வு மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், வணிகவியல், வரலாறு, புவியியல், மனையியல், அரசியல் அறிவியல், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பாட முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள், உடற்கல்வி ஆசிரியர் நிலை-2, பள்ளி துணை ஆய்வர்கள், விவரங்கள் கோருதல் – சார்பு.

அனைத்து அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாவட்டக்கல்வி அலுவலர், வேலூர்

பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளித்துணை ஆய்வர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை – 2 மற்றும் தொழிற்கல்வி பாடபிரிவில் வணிகவியல் போதிக்கும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் பார்வையில் காண் செயல்முறைகளில் தெரிவித்துள்ள வழிகாட்டுதலை பின்பற்றி கருத்துரு (Annexure-1) தயார் செய்து 3 நகல்களில் அனுப்பி வைக்குமாறு அனைத்து அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.