அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியருக்கு 4 இணை சீருடைகள் வழங்குதல் மற்றும் பயன்படுத்துதல் சார்பான அறிவுரைகள்

அனைத்து அரசு உதவிபெறும் பள்ளி தாளாளர்கள்/ தலைமையாசிரியர்களுக்கு,

அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியருக்கு 4 இணை சீருடைகள் வழங்குதல் மற்றும் பயன்படுத்துதல் சார்பான பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் இத்துடன் அனுப்பப்படுகிறது.

பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உதவிபெறும் பள்ளி தாளாளர்கள்/ தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து மாணவர்களும் அரசால் வழங்கப்படும் சீருடைகளை அணிந்துவர மாணவர்களுக்கு அறிவுறுத்தும்படி தாளாளர்கள்/ தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்