அரசு /அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பொருளியல்  (Economics) கற்பிக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு 29.11.2023   பணித்திறன் மேம்பாட்டு பயிற்சியில் கலந்துக் கொள்ள ஏதுவாக ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க தெரிவித்தல் – தொடர்பாக.

அனைத்து அரசு /அரசு உதவி மேல்நிலைப்

பள்ளித் தலைமயாசிரியர்கள், வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு /அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பொருளியல் (Economics)  கற்பிக்கும் அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும்  29.11.2023  அன்று பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி வேலூர், அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்துக் கொள்ள ஏதுவாக முதுகலை ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு சார்ந்த அரசு /அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

முதன்மைக்கல்வி அலுவலர்

வேலூர் மாவட்டம்