அனைத்துவகை பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறாது எனவும், மழலையர் விளையட்டுப்பள்ளிகள், நர்சரிபள்ளிகள் (LKG and UKG) வகுப்புகள் நடைபெறாது என தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்/வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு,

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 06.01.2022 முதல்  அனைத்துவகை பள்ளிகளிலும் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மழலையர் விளையாட்டுப்பள்ளிகள். நர்சரி பள்ளிகள் (LKG மற்றும் UKG) நடைபெற அனுமதி யில்லை எனவும், அனைத்துவகை பள்ளிகளிலும் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறாது எனவும் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இத்துடன்  கொரோனா பரவலை தடுக்க ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் அரசின் செய்தி வெளியீடு எண்.026, நாள் 05.01.2022 இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்பகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்