அடிப்படை திறன் பயிற்சி(BRIDGE COURSE) – முக்கிய தகவல்கள்

1)அரசு/நிதியுதவி உயர்நிலை/மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள G-Form ல் அடிப்படை திறன் பயிற்சி சார்ந்த தவல்களை பதிவு செய்ய வேண்டும்.

2) மாணவர்களுக்கு அடிப்படை திறன் பயிற்சி அளிக்க முழுமையாக ஆசிரியர் ஒருவரை தேர்வு செய்து அந்த வகுப்பு மாணவர்களுக்கென தனி கால அட்டவணை பின்பற்ற வேண்டும். அவ்வாறு தேர்வு செய்யும் ஆசிரியர் Bridge Course மாணவர்கள் அடிப்படை திறனில் முன்னேற்றம் அடைய நிர்ணயிக்கப்படும் நாள் வரை மற்ற வகுப்புகளுக்கு செல்ல வேண்டியது இல்லை

3) அடிப்படை திறன் பயிற்சி அளிக்க தேர்வு செய்த ஆசிரியர் அலுவலர்களின் பள்ளி பார்வையின் போது மாணவர்கள் அடிப்படை திறனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை விளக்க வேண்டும்

4) அடிப்படை திறன் பயிற்சி சார்ந்த மீளாய்வு கூட்டம்/Google meet போன்றவற்றில் சார்ந்த பொறுப்பு ஆசிரியர் பங்கேற்க வேண்டும்

5) சார்ந்த பொறுப்பு ஆசிரியர் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் கொண்டு கற்பிக்க தலைமை ஆசிரியர்கள் போதிய ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும்

6)தேவை இருப்பின் , தங்கள் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுனர்களின் ஆலோசனைகள் அடிப்படையில் Bridge Course வகுப்பறை சூழலை உருவாக்கலாம்

7) தலைமை ஆசிரியர்கள் இப்பணிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து குறிப்பிட்ட நாட்களில் அனைத்து மாணவர்களும் போதிய அடைவு திறன் பெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்

8) அடிப்படை திறன் பயிற்சி பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு ஆசிரியர்களை கொண்டு whatsapp குழு தொடங்க உள்ளதால் உடன்டியாக G-Formல் தவல்களை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது

9) சிறப்பாக செயல்படும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்

G-Form Link👇

https://forms.gle/5dEwsBLMEv5EQb1k8

முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்

பெறுநர்

அரசு/நிதியுதவி உயர்நிலை/மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்