TO ALL GOVT./GOVT AIDED HSS HMs – NEET தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் 19.03.2018க்குள் கோருதல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

ONLINE மூலம் பணம் செலுத்தி NEET தேர்விற்கு விண்ணப்பித்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு அரசால் இத்தேர்வுக்கான இலவச பயிற்சி புத்தகங்களும், வருகின்ற 04.04.2018 முதல் 04.05.2018 வரை தேர்வு சார்ந்த சிறப்பு பயிற்சி வகுப்புகளும், சென்னை, SPEED INSTITUTE மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, ONLINEல் விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்கள் விடுபடாமல் பின்வரும் படிவத்தில் பூர்த்தி செய்து சான்றுடன் 19.03.2018 அன்று பிற்பகல் 1.00 மணிக்குள் தனி நபர் மூலம் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலக ‘ஆ5’ பிரிவில் ஒப்படைக்குமாறு (17.03.2018 மற்றும் 18.03.2018 ஆகிய நாட்களிலும் பெறப்படும்) தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்கள் பள்ளியில் எந்த மாணவரும் விண்ணப்பிக்கவில்லை எனில் ‘இன்மை’ அறிக்கையினை தவறாமல் சார்ந்த படிவத்தில் தலைமையாசிரியர் கையொப்பத்துடன்  மேற்குறிப்பிட்ட தேதிகளில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு : சார்ந்த படிவத்தை தட்டச்சு செய்தோ அல்லது கையினால் எழுதப்பட்டோ பூர்த்தி செய்து ஒப்படைக்கலாம்.

CLICK HERE TO DOWNLOAD THE FORM

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.