CIRCULARS

01.01.2022-ல் உள்ளவாறு அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் – பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த முதுகலையாசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள்/ உடற்கல்வி இயக்குநர் நிலை-1) சார்பாக விவரங்களை பணிப்பதிவேட்டுடன் சமர்ப்பிக்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 01.01.2022-ல் உள்ளவாறு அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் - பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த முதுகலையாசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள்/ உடற்கல்வி இயக்குநர் நிலை-1)/ விவரங்களை சமர்ப்பிக்கும்போது சார்ந்த ஆசிரியரின் பணிப்பதிவேட்டுடன் தனிநபர் மூலம் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

2021-2022ஆம் கல்வியாண்டில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் – பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் – நியமனம் செய்யப்பட்டவர்களின் விவரம் கோருதல்

CIRCULARS
சார்ந்த அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, 2021-2022ஆம் கல்வியாண்டில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் – பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் – நியமனம் செய்யப்பட்டவர்களின் விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PROCEEDINGS 3565-A4-PTADownload PTA-appointment-formatDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

01.01.2022-ல் உள்ளவாறு அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் – பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த முதுகலையாசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள்/ உடற்கல்வி இயக்குநர் நிலை-1)/ அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியல் – தயார் செய்யக் கருத்துருக்கள் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 01.01.2022-ல் உள்ளவாறு அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் - பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த முதுகலையாசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள்/ உடற்கல்வி இயக்குநர் நிலை-1)/ அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியல் - தயார் செய்யக் கருத்துருக்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து விவரத்தினை 24.12.2021 அன்று 2.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PROCEEDINGS 3848-b1Download Proceedings-of-the-Commissioner-and-FormDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

வேலூர் மாவட்டம் – அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகள் – பள்ளிக் கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்தல் – இடித்து அப்புறப்படுத்தப்பட வேண்டிய கட்டிடங்கள் இடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகள் கவனத்திற்கு, அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளிக் கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்து இடித்து அப்புறப்படுத்தப்பட வேண்டிய  கட்டிடங்கள் இடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 2857-To-be-demolish-school-buildingDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

Neet சார்பான மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு கோரி விண்ணப்பிக்கும் மாணவர்களுடன் தலைமையாசிரியர்கள் 28.12.2021 அன்று காலை 10.00 மணிக்கு வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள தெரிவித்தல்

2020-2021ஆம் கல்வியாண்டில் நடந்து முடிந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 7.5 சதவீதம் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள் பயின்ற பள்ளியின் தலைமையாசிரியர்கள், விண்ணப்பிக்க உள்ள மாணவர்களுடன் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்றதற்கான சான்றுகளுடன் (Admission Register, Attendance, ஏற்கனவே பயின்ற பள்ளிகளின் TC (ஒட்டு File)   28.12.2021 (செவ்வாய்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு வேலூர்,அரசு(முஸ்லீம் ) மேல்நிலைப்பள்ளியில்  நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பு கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் அலகுத் தேர்வு காலஅட்டவணையின்படி நடத்துதல்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2021-2022ம் கல்வியாண்டில் அரசு / நகரவை/ ஆதிதிராவிட நலம் / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் , மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் அலகுத் தேர்வு டிசம்பர் 2021ம் மாதம் நடைபெறஉள்ளது. இப்பொருள் சார்பான செயல்முறை கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு UNIT-TEST-II-Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும்தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிற

அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியருக்கு 4 இணை சீருடைகள் வழங்குதல் மற்றும் பயன்படுத்துதல் சார்பான அறிவுரைகள்

CIRCULARS
அனைத்து அரசு உதவிபெறும் பள்ளி தாளாளர்கள்/ தலைமையாசிரியர்களுக்கு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியருக்கு 4 இணை சீருடைகள் வழங்குதல் மற்றும் பயன்படுத்துதல் சார்பான பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் இத்துடன் அனுப்பப்படுகிறது. பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உதவிபெறும் பள்ளி தாளாளர்கள்/ தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து மாணவர்களும் அரசால் வழங்கப்படும் சீருடைகளை அணிந்துவர மாணவர்களுக்கு அறிவுறுத்தும்படி தாளாளர்கள்/ தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Government-Aided-School-Uniform-Worn-RelatedDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

To All BEOs/HMs/Principals – இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு விவரத்தினை சரிபார்த்து விவரத்தினை உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

CIRCULARS
To All BEOs/HMs/Principals, கீழே கொடுக்கப்பட்டுள்ள LINK-ஐ Click செய்து இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு விவரத்தினை சரிபார்த்து விவரத்தினை மாற்றம் இருப்பின் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விவரங்கள் சரியாக இருப்பின் IF DETAILS VERIFIED & FOUND CORRECT OK என்ற கலத்தில் OK என்றும் இல்லை எனில் NO என்றும் சரியான விவரத்தினை உள்ளீடு செய்து Remarks கலத்தில் குறிப்பிடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விவரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு சமர்ப்பிக் வேண்டியுள்ளதால் 20.12.2021 மாலை 05.00 மணிக்குள் சரிபார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO VERIFY THE DETAILS AND ENTER CORRECT DETAILS IF ANY CHANGE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அனைத்து அரசு/அரசு நிதியுதவி/ மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் கட்டிடம், கழிவறை, நீர்த்தேக்கத்தொட்டி ஆகியவற்றை தினமும் ஆய்வு மேற்கொள்ள தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
            அனைத்து அரசு/அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்/ சி.பி.எஸி.இ. பள்ளிகளின் முதல்வர்களுக்கு,             பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்துவகை கட்டிடங்கள், கழிவறைகள்  நீர்த்தேக்கத் தொட்டிகளை தினமும் காலை மாலை இரண்டு வேளையும் பார்வையிட்டு அதன் தன்மையினை உறுதி செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். /மிகவும் அவசரம்/தனிகவனம்/ தலைமையாசிரியர்கள் தினமும் பள்ளிகளில் தவறாமல் பார்வையிட வேண்டிய விவரங்கள்             அனைத்து அரசு/அரசு நிதியுதவி/ சுயநிதி பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்/ சி.பி.எஸி.இ. பள்ளிகளின் முதல்வர்களுக்கு,             பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்துவகை கட்டிடங்கள்,

வனம் – வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு/அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகள் – 2021-22ஆம் ஆண்டிற்கான வருடாந்திர மரம் நடுதல் – தொடர்பாக

CIRCULARS
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு/அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் 2021-22ஆம் ஆண்டிற்கான வருடாந்திர மரம் நடுதல் தொடர்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 3785-TREE-PLANTING-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.