CIRCULARS

அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் 10.03.2022 நிலவரப்படி உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் நிரப்பத்தகுந்த காலிப்பணியிட விவரங்கள் இணைப்பிலுள்ள படிவத்தை பூர்த்தி செய்து 10.03.2022 மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக அ3 பிரிவில் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் 10.03.2022 நிலவரப்படி  உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில்  நிரப்பத்தகுந்த காலிப்பணியிட விவரங்கள் இணைப்பிலுள்ள படிவத்தை பூர்த்தி செய்து 10.03.2022 மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக அ3 பிரிவில் தனிநபர் மூலம் நேரில்  ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/நகராட்சி உ யர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். BT-VACANCIES-AS-ON-10-03-2022Download PROCEEDINGS -BT_Vacancy_DetailsDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு தனித்தேர்வர்கள் பொதுத்தேர்வு சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்தல் சார்பான அறிவுரைகள்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், PRIVATE-ONLINE-APP_20220309_0001Download CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENTS முதன்மைக்கல்வி அலுவலகம், வேலூர்

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு மே 2022 பெயர்பட்டியல் பதிவிறக்கம் செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு மே 2022 பெயர்பட்டியல் பதிவிறக்கம் செய்ய தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 2-NR-Proceedings_20220309_0001Download 2-NR-Proceedings_20220309_0001-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மிக மிக அவசரம் – தேர்தல் கல்விக்குழு (ELECTORAL LITERACY CLUB) பொறுப்பாசியர்கள் சார்பான விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படும் தேர்தல் கல்விக்குழு (ELECTORAL LITERACY CLUB) பொறுப்பாசிரியர்கள் சார்பான விவரங்களை உடன் உள்ளீடு செய்யுமாறும், தேர்தல் கல்விக்குழு துவங்கபடாத பள்ளிகள் உடனடியாக துவங்கி அதற்கு ஒரு பொறுப்பாசிரியரை நியமனம் செய்து அவர் சார்பான விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து நாளை (09.03.2022) காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறும் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம் CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மலபார் கோல்டு நிறுவனத்தின் மூலம் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெறுதல் சார்பாக

CIRCULARS
சார்ந்த அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் விழா மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் தலைமையில் இணைப்பிலுள்ள 26 பள்ளிகளின் 206 மாணவர்களுக்கு மலபார் கோல்டு நிறுவனம் மூலம் (10.03.2022) வியாழன் கிழமை காலை 09.00 மணிக்கு வேலூர் ( பழைய பேருந்து நிலையம் ) டவுன் ஹாலில் வழங்கப்படவுள்ளது. எனவே, சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தெரிவித்து, பள்ளி சீருடை மற்றும் மாணவர் அடையாள அட்டையுடன் ஒரு பொறுப்பான ஆசிரியரை நியமித்து பாதுகாப்பான முறையில் சரியான நேரத்தில் மேற்காண் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்கள் உதவித்தொகை பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். MALABAR-GOLD மு

மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு 2022 – தேர்வு மையம் மற்றும் இணைப்பு பள்ளிகள் சரிபார்க்க கோருதல்

CIRCULARS
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு 2022 தொடர்பாக தேர்வு மையம் மற்றும் இணைப்பு பள்ளிகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. தேர்வு மையத்திற்குண்டான இணைப்பு பள்ளிகள் சரியாக உள்ளதா என சரிபார்த்துக்கொள்ளுமாறு தேர்வு மைய மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இணைப்பு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் HSS +1 Exam centres - list for verificationDownload HSC-1-centre-lilst-1Download Centres list +1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

01.01.2022 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்குப் பதவி உயர்வு/ பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தவர்களின் உத்தேச முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் – புதியதாக சேர்க்கை, திருத்தம் இருப்பின் விவரங்கள் உடனடியாக அனுப்பக் கோருதல் சார்பாக.

CIRCULARS
தலைமை ஆசிரியர்கள் அரசு / நகரவை / உயர்  / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்ட அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இப்பட்டியலை பள்ளி ஆசிரியர்களின் பார்வைக்கு உட்படுத்தி அவர்களது பணி விவரங்கள் சரியாக உள்ளதா, முன்னுரிமை உரிய இடத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா எனவும், திருத்தங்கள் இருப்பின் / மற்றும் புதியதாக சேர்க்கை வேண்டியவர்கள் / நீக்க வேண்டிய ஆசிரியர்கள் இருப்பின் அதற்கான உரிய படிவத்தில் இரண்டு நகல்கள் தயார் செய்து தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் சம்பந்தப்பட்ட ஆசிரியர் நேரில் வந்து வேலூர் மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளரை இன்று (08.03.2022) மாலைக்குள் கருத்துருவை ஒப்படைக்கும்படி வேலூர் மாவட்ட உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். HS HM Panel 2022...1.- Vellore alonexlsxDownload HS HM Panel 202

அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் /பதவிஉயர்வு மூலம் முதுகலை ஆசிரியர் நியமனம் – தமிழ், ஆங்கிலம்,கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, புவியியல், மனையியல், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பாட முன்னுரிமைப்பட்டியல் அனுப்புதல்-இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் 07.03.2022 அன்று காலை 9.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பு.

CIRCULARS
அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் /பதவிஉயர்வு மூலம் முதுகலை ஆசிரியர் நியமனம் சார்ந்து தமிழ், ஆங்கிலம்,கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, புவியியல், மனையியல், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பாட முன்னுரிமைப்பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. முன்னரிமைப்பட்டியல்களை பதிவிறக்கம் செய்து பட்டியலில் இடம் பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்களை தலைமையாசிரியர்கள் 07.03.2022 அன்று காலை 9.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொள்ளும் வகையில் பணி விடுவித்தனுப்புமாறு அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 2811-TAMIL-LETTER-11-02-202

தேர்வுகள் – வேலூர் மாவட்டம்- 2021- 2022 ஆம் கல்வியாண்டிற்குரிய மேல்நிலை முதலாமாண்டு திருப்புதல் தேர்வு கால அட்டவணை மற்றும் பாடத் திட்டம் அனுப்பி வைத்தல் – தொடர்பாக

தேர்வுகள் - வேலூர் மாவட்டம்- 2021- 2022 ஆம் கல்வியாண்டிற்குரிய மேல்நிலை முதலாமாண்டு திருப்புதல் தேர்வு கால அட்டவணை மற்றும் பாடத் திட்டம் சார்பாக சென்னை -6 அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து அரசு /அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது, 1-Revision-Test-Download 11th-Std-Revision-Exam-Syllabus_2021-22_TMDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

2021-2022ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை சுற்றறிக்கை

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2021-2022ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைது அனுப்பலாகிறது. அனைத்து பள்ளிகளிலும் தகவல் பலகை மூலமாகவும் சார்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு time-table-press-release-2021-2022-finalDownload time-table-covering-letterDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும்