Author: ceo

எண்ணும் எழுத்தும் – இரண்டாம் கட்ட மாவட்ட அளவிலனா முதல்கட்ட பயிற்சியில் கலந்துக் கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்களுக்கான பயிற்சி வழங்குதல் – சார்பு.

CIRCULARS
சார்ந்த ஆசிரியர்கள் எண்ணும் எழுத்தும் - இரண்டாம் கட்ட மாவட்ட அளவிலனா முதல்கட்ட பயிற்சியில் கலந்துக் கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்களுக்கான பயிற்சி வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் 26.07.2022, 27.07.2022 மற்றும் 28.07.2022 (3 நாட்கள்) நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் கலந்துக் கொள்ளும் ஆசிரியர்கள் எண்ணும் எழுத்தும் - ஆசிரியர்களுக்கான கையேடு கொண்டு வருதல் வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் EE-Proceeding-List-of-Teachers-1Download

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – எண்ணும் எழுத்தும் இரண்டாம் கட்ட மாவட்ட அளவிலான பயிற்சி – முதல் கட்ட பயிற்சியில் கலந்துகொள்ளாத மற்றும் அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பயிற்சி 26.07.2022, 27.07.2022 மற்றும் 28.07.2022 ஆகிய நாட்கள் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள்/ பயிற்றுநர்கள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - எண்ணும் எழுத்தும் இரண்டாம் கட்ட மாவட்ட அளவிலான பயிற்சி - முதல் கட்ட பயிற்சியில் கலந்துகொள்ளாத மற்றும் அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பயிற்சி 26.07.2022, 27.07.2022 மற்றும் 28.07.2022 ஆகிய நாட்கள் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொண்டு ஆசிரியர் பயிற்றுநர்களை பயிற்சியில் கலந்துகொள்ளும்வகையில் விடுவித்தனுப்ப அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். EE-Proceeding-List-of-TeachersDownload முதன்மைக்கல்வி அலுவலர் , வேலூர்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – அறிவியல் பாட பட்டதாரிஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி -பணியிலிருந்து விடுவித்து அனுப்பக் கோருதல் – தொடர்பாக

STEM-50-S-BTs-@-DKM-CollegeDownload Vellore-District-List-of-Teachers-for-TNSCST-STEM-TrainingDownload //ஒப்பம்// //க.முனுசாமி// முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு சார்ந்த ஆசிரியர்களை உடன் பணியிலிருந்து விடுவித்து அனுப்பும் பொருட்டு மேல் நடவடிக்கைக்காக அனுபபலாகிறது

சதுரங்க ஒலிம்பியாட் போட்டி சார்பான செய்தி

சதுரங்க போட்டியில் ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு சதுரங்க போட்டியில் ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் 25-07-2022 அன்று நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான போட்டிக்கு கலந்துக்கொள்ள வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் போட்டி காலை 07.30 மணிக்கு துல்லியமாக துவங்கப்படவுள்ளதால் காலை 7.00 மணிக்கு வருகை புரிய நடவடிக்கை எடுக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவ மாணவியர்கள் அன்றைய தினமே சென்னை செல்லவுள்ளதால் தயார் நிலையில் கூடுதலாக சீறுடை மற்றும் தங்குவதற்கு தேவையான துணி மற்றும் பொருட்கள் தயார்நிலையில் வைக்க மாணவர்களுக்கு தெரிவிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சதுரங்க போட்டியில் ஒன்றிய அளவில

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பாடவாரியாக ஒரு நாள் புத்தாக்க பயிற்சி /கலந்துரையாடல்/ ஆலோசனை – 25-07-2022 முதல் நடைபெறுதல்(வேலூர் நகர்,வேலூர் புறநகர்,அணைக்கட்டு மற்றும் கணியம்பாடி ஒன்றியத்திற்கு வேலூர்,ஊரிசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளிக்கு மற்றம் செய்யப்பட்ட விவரம் தெரிவித்தல்-காட்பாடி,கே.வி.குப்பம்,குடியாத்தம் பேர்ணாம்பட்டுஒன்றியங்களுக்கு காட்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் – சார்பு.

அணைத்து அரசு/ நகராட்சி/ நிதியுதவி  உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பாடவாரியாக ஒரு நாள் புத்தாக்க பயிற்சி /கலந்துரையாடல்/ ஆலோசனை - 25-07-2022 முதல் 29-07-2022 வரை நடைபெறுதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகள் பதிவிறக்கம் செய்து உரிய நேரத்தில் அந்தந்த பாட நாட்களில் சார்ந்த பாட பட்டதாரி ஆசிரியர்களை விடுவித்து அனுப்புமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். BTS-TRAINING-Revised-PlaceDownload RPs-List-1Download

அனைத்து வகை அரசு / நிதியுதவி /ஆ.தி.ந.ப/ உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம்.

அனைத்து வகை அரசு / நிதியுதவி /ஆ.தி.ந.ப/ உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம். 26.07.2022 அன்று பிற்பகல் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிதியுதவி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுதல் - சார்பு. LETTER-5-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகை அரசு / நிதியுதவி /ஆ.தி.ந.ப/ உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின், தலைமை ஆசிரியர்கள் (வே, மா) நகல் - மாவட்டக் கல்வி அலுவலர் , வேலூர். (தகவலுக்காக )

மிக மிக அவசரம் -பள்ளி வங்கி கணக்கு Remittance Amount- ( மஞ்சள் நிறத்தில் உள்ள ) தொகையினை சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் E – challan மூலம் செலுத்தி அதற்குரிய நகல் ஒப்படைக்க கோருதல் – சார்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
வங்கி கணக்கு Remittance Amount- ( மஞ்சள் நிறத்தில் உள்ள ) தொகையினை சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர் 22.07.2022 5 மணிக்குள் E - challan மூலம் செலுத்தி அதற்குரிய நகல் இவ்வலுவலக அ2 பிரிவில் ஒப்படைக்குமாறு சமர்பிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். BANK-ACCOUNT-REMITTED-ACCOUNT-DETAILS-Download ,குறிப்பு - மேற்காண் பள்ளிகளுக்கு இத்தகவல் தொடர்பாக பல முறை சுற்றறிக்கை அனுப்பியும் இந்நாள் வரை அதற்குரிய E- Challan ரசீது சமர்பிக்காமல் காலதாமதித்து வருந்தத்தக்கது, இனியும் காலதாமதம் செய்யும் பள்ளி தலைமைஆசிரியர்கள் இப்பொருள் சார்ந்து தங்கள் மீது ஏன் நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்பதற்கான விளக்கத்துடன் இக்கடிதம் கிடைக்கப்பெற்ற 24 மணி நேரத்திற்குள் சமர்பிக்க அறிவுறுத்தப்படுகிறது, // ஒப்பம் // //க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர்

போட்டி தேர்வு – Group IV தேர்வு நடைபெறும் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கான அறிவுரை – சார்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
2523-B4-21.07.2022Download // ஒப்பம் // //க.முனுசாமி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டம் – 2022 -2023 – சதுரங்க ஒலிம்பியாட் – 25-07-2022 அன்று ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளியில் நடைபெறுதல்- விருப்பமுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் கலந்து கொள்ள ஏதுவாக பணியாளர்களின் பெயர் பட்டியல் சமர்பிக்க கோருதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
2085-B4-21.07.2022Download //ஒப்பம் // //க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

மிக மிக அவசரம் – அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் போதிய வகுப்பறையின்மையின் காரணமாக மாணவர்களை மரத்தடியின் கீழ் அமரச்செய்து வகுப்புகள் நடைபெறும் பள்ளிகள் விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் வகுப்பறையின்மையின் காரணமாக மாணவர்களை மரத்தடியின் கீழ் அமரச்செய்து எத்தனை வகுப்புகள் நடைபெறுகின்றன என்கிற எண்ணிக்கை விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Sheet –ல் உடனடியாக பதிவிடுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்