Month: February 2019

மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வு – தேர்வு மையங்களில் பயன்படுத்தப்படும் படிவங்கள்

மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வு – தேர்வு மையங்களில் பயன்படுத்தப்படும் படிவங்கள்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவங்கள் தேர்வு மையத்தில் பயன்படுத்துமாறு அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேல்நிலை இரண்டாமாண்டிற்கு தனியாகவும் முதலாமாண்டிற்கு தனியாகவும் படிவங்கள் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். +2 exam forms முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்
மார்ச் 2019 மேல்நிலை இரண்டமாண்டு பொதுத் தேர்வு கூடுதல் நேர சலுகையுடன் தேர்வு எழுதும் மாணவர்கள் சார்பான சுற்றறிக்கை

மார்ச் 2019 மேல்நிலை இரண்டமாண்டு பொதுத் தேர்வு கூடுதல் நேர சலுகையுடன் தேர்வு எழுதும் மாணவர்கள் சார்பான சுற்றறிக்கை

அனைத்து மேல்நிலைப் பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைத்து அனுப்பப்படும் செயல்முறைகளின்படி செயல்படுமாறு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 262594 H1 EXTRA DYSLEXIA 28.02.2019 முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்,
நாளை (01.03.2019) முதல் நடைபெறவுள்ள மேல்நிலைப் பொதுத்தேர்வு சார்பான அறிவுரைகள்

நாளை (01.03.2019) முதல் நடைபெறவுள்ள மேல்நிலைப் பொதுத்தேர்வு சார்பான அறிவுரைகள்

CIRCULARS
  அனைத்து தலைமையாசிரியர்/ ஆசிரியர்/ அலுவலகப்பணியாளர்கள் கவனத்திற்கு,             நாளை (01.03.2019) முதல் நடைபெறவுள்ள மேல்நிலைப் பொதுத்தேர்வு சார்பான தேர்வுப்பணி ஆணை பெறப்பட்டுள்ள அனைத்து முதன்மைக்கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள், பறக்கும்படை உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் உரிய நேரத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வுப்பணியினை செம்மையாக மேற்கொண்டு தேர்வின் மந்தனத் தன்மையை கடைபிடித்து அரசுத் தேர்வுத்துறையினை வழிகாட்டுதல்களை பின்பற்றி அனைத்துத் தேர்வுகளையும் சிறப்பாக நடத்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மார்ச் 2019- மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு முகப்புத் தாட்கள் பெறப்படாத தேர்வர்களது விடைத்தாட்கள் அனுப்புதல்

மார்ச் 2019- மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு முகப்புத் தாட்கள் பெறப்படாத தேர்வர்களது விடைத்தாட்கள் அனுப்புதல்

CIRCULARS
அனைத்து மேல்நிலைப்பள்ளி முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு, மார்ச் 2019- மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு முகப்புத் தாட்கள் பெறப்படாத தேர்வர்களது விடைத்தாட்கள் அனுப்புதல் சார்பாக இணைப்பில் உள்ள இணை இயக்குநர் அவர்களின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளம்படி அனைத்து மேல்நிலைப்பள்ளி முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE
ஆதிதிராவிடர் நலம் – 2018 – 2019 கல்வி உதவித்தொகை – 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் சுகாதாரமற்ற தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை (Unclean Occupation) நடப்பாண்டு முதல் மாணாக்கர்களின் வங்கி கணக்கில் மின்னனு முறையில் செலுத்துவது – படிவத்தை பூர்த்தி செய்து 04.03.2019 க்குள் வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவித்தல்

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு ஆதிதிராவிடர் நலம் – 2018 – 2019 கல்வி உதவித்தொகை – 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் சுகாதாரமற்ற தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை (Unclean Occupation) நடப்பாண்டு முதல் மாணாக்கர்களின் வங்கி கணக்கில் மின்னனு முறையில் செலுத்துவது – படிவத்தை பூர்த்தி செய்து 04.03.2019 க்குள் வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஒப்படைக்க அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING FORMAT முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை தேர்வு பணி சார்பாக இதுவரை  ஆணை ஏதும் பெறப்படாத முதுகலை ஆசிரியர்களை இன்று (28.02.2019) மாலை 4.00 மணிக்கு முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு விடுவித்தனுப்பும்படி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, மேல்நிலை தேர்வு பணி சார்பாக இதுவரை  ஆணை ஏதும் பெறப்படாத முதுகலை ஆசிரியர்களை இன்று (28.02.2019) மாலை 4.00 மணிக்கு முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு வருகைபுரியும் வகையில் விடுவித்தனுப்பும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ALL HMs-  ENTER THE DETAILS REGARDING TEACHERS RELIEVED FOR HSC EXAM DUTY

ALL HMs- ENTER THE DETAILS REGARDING TEACHERS RELIEVED FOR HSC EXAM DUTY

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, மேல்நிலை பொதுத்தேர்வு பணி மேற்கொள்ளும் பொருட்டு ஆணை பெறப்பட்டு விடுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை Click உடனடியாக காலை 10.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
கூடுதல் அறை கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டு தேர்வு மைய ஆயத்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டியவர்கள்

கூடுதல் அறை கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டு தேர்வு மைய ஆயத்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டியவர்கள்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்,   கூடுதல் அறை கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டு தேர்வு மைய ஆயத்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டிய பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) மற்றும் அனைத்து ஏற்கனவே ஆணை பெறப்பட்ட ஆசிரியர்களையும் விடுவித்து தேர்வு மையங்களில் காலை 11.00 மணிக்கு நடைபெறும் ஆயத்தக்கூட்டத்தில் கலந்துகொள்ள அனுப்பிவைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE ADDITIONAL LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மறு சுற்றறிக்கை – தேர்வின் அவசியம் கருதி, நாளை (28.02.2019) அறைகண்காணிப்பாளர்களுக்கான ஆயத்தகூட்டம் காலை 11.00 மணிக்கு அந்தந்த தேர்வு மையங்களில் முதன்மைக்கண்காணிப்பாளர்கள் நடத்துதல்

மறு சுற்றறிக்கை – தேர்வின் அவசியம் கருதி, நாளை (28.02.2019) அறைகண்காணிப்பாளர்களுக்கான ஆயத்தகூட்டம் காலை 11.00 மணிக்கு அந்தந்த தேர்வு மையங்களில் முதன்மைக்கண்காணிப்பாளர்கள் நடத்துதல்

CIRCULARS
அனைத்து மேல்நிலைத்தேர்வுகள் முதன்மைக்கண்காணிப்பாளர்கள்/ தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,           நாளை (28.02.2019) அறைகண்காணிப்பாளர்களுக்கான ஆயத்தகூட்டம் அந்தந்த தேர்வு மையங்களில் நடத்தப்படவேண்டும் என முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.         அறை கண்காணிப்பாளர்களுக்கான ஆணை பெறப்பட்ட அனைத்து ஆசிரியர்களும் தங்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையத்திற்கு காலை 11.00 மணிக்கு கலந்துகொள்ளும் வகையில் சார்ந்த தலைமையாசிரியர்கள் விடுவித்தனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் தேர்வு பணியாற்றும் விவரங்களை பூர்த்தி செய்து சார்ந்த பணியாளரிடம் கையொப்பம் பெற்று 28.02.2019 அன்று பிற்பகல் 2.00 மணிக்குள் சார்ந்த  மாவட்டக்கல்வி அலுவலகத்தில் கட்டாயம் ஒப்படைக்கப்படவேண்டும். அறைகண்காணிப்பாளர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து ஆ
மிக மிக அவசரம் – கடைசி நினைவூட்டு – 2018-19 கல்வி ஆண்டில் சிறப்பு ஊக்கத்தொகை சார்பாக 12ம் வகுப்பு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் சமர்ப்பிக்காத பள்ளிகள் 28.02.2019 அன்று காலை 11.00 மணிக்குள் சமர்ப்பிக்க கோருதல்

சார்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, சிறப்பு ஊக்கத்தொகை - அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை 25.02.2019 க்குள் சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டும்  இதுவரை சமர்ப்பிக்காத பள்ளி தலைமையாசிரியர்கள் இதையே கடைசி நினைவூட்டாக கருதி  உடனடியாக விவரங்களை 28.02.2019 அன்று காலை 11.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. தவறும் பட்சத்தில் இதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சார்ந்த தலைமையாசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்