Month: March 2018

ALL HMs -ஹஜ் புனித பயனம் 2018-ஹஜ் தன்னார்வ தொண்டராக பணிபுரிய விருப்பம் கோருதல்

CIRCULARS
அனைத்து தலைமையாசிரியர்களும், ஹஜ் புனித பயனம் 2018- சவுதி அரேபியாவிற்கு ஹஜ் தன்னார்வ தொண்டராக மாற்றுப்பணியில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் www.hajcommittee.gov.in  என்ற இணைய தளம் மூலமாக 24.03.2018 அன்றுக்குள் பதிவீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE Hajj Circular 2018 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

TO ALL GOVT./GOVT AIDED HSS HMs – NEET தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் 19.03.2018க்குள் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, ONLINE மூலம் பணம் செலுத்தி NEET தேர்விற்கு விண்ணப்பித்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு அரசால் இத்தேர்வுக்கான இலவச பயிற்சி புத்தகங்களும், வருகின்ற 04.04.2018 முதல் 04.05.2018 வரை தேர்வு சார்ந்த சிறப்பு பயிற்சி வகுப்புகளும், சென்னை, SPEED INSTITUTE மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, ONLINEல் விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்கள் விடுபடாமல் பின்வரும் படிவத்தில் பூர்த்தி செய்து சான்றுடன் 19.03.2018 அன்று பிற்பகல் 1.00 மணிக்குள் தனி நபர் மூலம் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலக ‘ஆ5’ பிரிவில் ஒப்படைக்குமாறு (17.03.2018 மற்றும் 18.03.2018 ஆகிய நாட்களிலும் பெறப்படும்) தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்கள் பள்ளியில் எந்த மாணவரும் விண்ணப்பிக்கவில்லை எனில்

+1 பொதுத்தேர்வு அகமதிப்பீட்டு மதிப்பெண்களை உள்ளீடு செய்யும்போது வருகைபுரியாத மாணவர்களுக்கு 0 என்று உள்ளீடு செய்ய வேண்டும். (zero என்ற எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்)

CIRCULARS
அனைத்து தலைமையாசிரியர்கள்/+1  தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் +1 பொதுத்தேர்வு அகமதிப்பீட்டு மதிப்பெண்களை (Internal Marks) உள்ளீடு செய்யும்போது வருகைபுரியாத மாணவர்களுக்கு  0  என்று உள்ளீடு செய்ய வேண்டும். (zero என்ற எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்)   Chief Educational Officer, Vellore

பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிறுவனம் மூலம் இளநிலை உதவியாளர்/ உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி நடத்துதல்-பயிற்சி பெற வேண்டியவர்களின் பட்டியல் சரிபார்க்கும் பொருட்டு வெளியிடுதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிறுவனம் மூலம் இளநிலை உதவியாளர்/ உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி நடத்துதல்-பயிற்சி பெற வேண்டியவர்களின் பட்டியல் சரிபார்க்கும் பொருட்டு வெளியிடுதல். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS Bhavani sagar trg cov ltr CLICK HERE TO DOWNLOAD THE LIST   முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.

அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 31.12.2016 வரை நியமனம் செய்யப்பட்டு பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் சார்பாக உடற்கல்வி ஆசிரியர் நிலை-2 பதவி உயர்வுக்கான தற்காலிக பணிமூப்பு பட்டியல் 01.01.2018 நிலவரப்படி வெளியிடுதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 31.12.2016 வரை நியமனம் செய்யப்பட்டு பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் சார்பாக உடற்கல்வி ஆசிரியர் நிலை-2 பதவி உயர்வுக்கான தற்காலிக பணிமூப்பு பட்டியல் 01.01.2018 நிலவரப்படி வெளியிடப்படுகிறது. திருத்தங்கள், சேர்க்கை /நீக்கம் ஏதுமிருப்பின் 19.03.2018 அன்று இவ்வலுவலக ‘அ4‘ பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE SENIORITY LIST OF PD Gr II Panel AS on 01.01.2018 முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.

2017-18ம் கல்வி ஆண்டிற்கான பெண் கல்வி உதவித்தொகை மற்றும் ஆங்கில வழி பயிலும் மாணாக்கர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் சுகாதாரமற்ற தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கான உதவிதொகை ஆகிய உதவித்தொகைகளுக்கான கேட்புப்பட்டியல் சமர்ப்பிக்க கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள், 2017-18ம் கல்வி ஆண்டிற்கான பெண் கல்வி உதவித்தொகை மற்றும் ஆங்கில வழி பயிலும் மாணாக்கர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் சுகாதாரமற்ற தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கான உதவிதொகை ஆகிய உதவித்தொகைகளுக்கான கேட்புப்பட்டியல் சமர்ப்பிக்காத தலைமையாசிரியர்கள் உடனடியாக 19.03.2018க்குள் வேலூர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்குமாறு சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE CIRCULAR முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

NEET , அனைத்துவகையான போட்டித்தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளுக்கு தயார் செய்வதற்கு பயிற்சி-22 பயிற்சி மையங்களின் முதுகலை பாட ஆசிரியர்களுக்கு (Phy,Che, Bot & Zoology) “SPEED” கல்வி நிறுவனத்தின் மூலம் பயிற்சி வழங்குதல்– ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துகொள்ள விடுவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/அரசுநிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள், NEET , அனைத்துவகையான போட்டித்தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளுக்கு தயார் செய்வதற்கு பயிற்சி-22 பயிற்சி மையங்களின் முதுகலை பாட ஆசிரியர்களுக்கு (Phy,Che, Bot  & Zoology)  “SPEED”  கல்வி நிறுவனத்தின் மூலம் பயிற்சி வழங்குதல்– ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துகொள்ள விடுவித்தல் சார்பான இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLAOD THE Thoduvanam Training Centres CLICK HERE TO DOWNLAOD THE Blockwise Inchage teachers முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

ஆசிரியரல்லாதோர் சார்பான சுய விவரங்கள் (Non-Teaching Staff Profile)-ஆன்லைன் மூலம் பள்ளிகள்/ அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் சார்பான விவரங்கள் பதிவேற்றம் செய்ய கோருதல்

CIRCULARS
அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், ஆசிரியரல்லாதோர் சார்பான சுய விவரங்கள் (Non-Teaching Staff Profile)-ஆன்லைன் மூலம் பள்ளிகள்/ அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் சார்பான விவரங்கள் பதிவேற்றம் செய்தல் சார்பான இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி 17.03.2018க்குள் உள்ளீடு செய்திடுமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM FOR NON TEACHING STAFF FORMAT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

2016-17ம் ஆண்டு உலகத்திறனாளர்களைக் கண்டறியும் திட்டத்தின் கீழ் 6, 7 மற்றும் 8ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான மண்டல அளவிலான தடகள போட்டிகள் விழுப்புரம், மாவட்ட விளையாட்டரங்கத்தில், 17.03.2018 அன்று காலை 7.00 மணி அளவில் நடைபெறுதல்

CIRCULARS
  2016-17ம் ஆண்டு உலகத்திறனாளர்களைக் கண்டறியும் திட்டத்தின் கீழ் 6, 7 மற்றும் 8ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான மண்டல அளவிலான தடகள போட்டிகள் விழுப்புரம், மாவட்ட விளையாட்டரங்கத்தில், 17.03.2018 அன்று காலை 7.00 மணி அளவில் நடைபெறுதல் சார்பாக இணைக்கப்பட்டுள்ள முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிட தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்