2018-19ம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா பிறந்த தின மிதிவண்டி போட்டி 15.09.2018 அன்றுவேலூரில் நடத்துல் – மாணவ/மாணவிகளை போட்டிகளில் பங்கேற்க செய்ய தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2018-19ம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா பிறந்த தின மிதிவண்டி போட்டி 15.09.2018 அன்றுவேலூரில்நடைபெறவுள்ளது. அனைத்துப்பள்ளிகளை சார்ந்த 13 வயது, 15 வயது மற்றும் 17 வயது மாணவ/ மாணவியர் பங்கேற்க செய்ய தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மாணவ/மாணவிகளை போட்டிகளில் பங்கேற்க செய்ய தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பேரறிஞர் அண்ணா பிறந்த தின மிதிவண்டி போட்டிகள் நடைபெறும்நாள் 15.09.2018 காலை 6.30 மணி

இடம் : போட்டிகள்காட்பாடி அருகேயுள்ள சிருஷ்டி மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள பிரம்மபுரம் என்ற இடத்திலிருந்து துவக்கப்பட்டு நடத்தப்படவுள்ளது.

மேற்படி போட்டிகள் சிறப்பாக நடைபெற அனைத்து தலைமையாசிரியர்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.